செத்தாலும் சுடுகாடு இல்லை
முத்தாண்டிபாளையம் அருந்ததிய மக்களின் அவலநிலை
உடனடியாக சுடுகாட்டுக்கு இடம் வழங்க,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
செத்தால்தான் சுடுகாடு தெரியும் என்று ஒரு சொல்வழக்கு உண்டு. ஆனால், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்தாண்டிபாளையம் அருந்ததிய மக்கள் செத்தாலும் சுடுகாடு இல்லை என்பது தான் விடுதலை இந்தியாவின் துயரம்.
கடந்த 22.04.2020 புதன் கிழமையன்று, முத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி சண்முகம் என்பவரின் மனைவி சசிகலா (35) உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். அவரும் மாற்றுத் திறனாளி.
முத்தாண்டிபாளையத்தில் பொதுஇடுகாடு உள்ளது. ஆனால், அங்கு தலித் மக்களின் உடல்களைப் புதைக்க அனுமதி இல்லை. எனவே, இறந்த சசிகலாவின் உடலைப் புதைப்பதற்காக, பல ஆண்டுகளாக அருந்ததிய மக்களின் இடுகாட்டுப் பயன்பாட்டில் உள்ள முத்தாண்டிபாளையம் செல்லும் முக்கிய சாலை ஓரத்திற்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
பிணத்தைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று இடுகாட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிலர் தடுத்துநிறுத்தியுள்ளனர். அருந்ததிய மக்கள் போராட்டத்தில் இறங்கவே, பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம், பல்லடம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், அவர்கள் பல ஆண்டுகளாக இடுகாடாகப் பயன்படுத்தி வரும் இடம் பட்டா நிலம் என்று வட்டாட்சியர் கூறியுள்ளார்.
அருந்ததிய மக்கள், நாங்கள் இங்கு தான் இறந்தவர்களைக் காலங்காலமாகப் புதைத்து வருகிறோம். இப்போது புதைக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது?. நீங்கள் அனுமதிக்கும் வரை சசிகலாவின் உடலை எடுத்துச் செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
அதன்பிறகு, அருந்ததிய மக்கள் ஏற்கனவே சொன்ன இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது எலும்புத் துண்டுகள் வெளிவந்தன. அதனை ஏற்றுக் கொண்ட வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தற்காலிகமாக அங்கேயே புதைக்க அனுமதித்து, அப்போதைக்கு பிரச்சனையை முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.
வழக்கறிஞர் செந்தில்குமார் மூலம் இதனைக் கேள்விப்பட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திருப்பூர் மாவட்டக் குழுவின் சார்பாக 01.06.2020 (திங்கள்) அன்று மாலை முத்தாண்டிபாளையத்தில் களஆய்வு நடத்தினோம்.
சுமார் 20 குடும்பங்கள் வசித்து வரும் அருந்ததியர் குடியிருப்பு அது. முழுவதும் அரசின் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளாகவே உள்ளன. அனைவரும் கூலி வேலை செய்து பிழைக்கும் உழைக்கும் மக்கள்.
இறந்த சசிகலாவின் கணவர் திரு. சண்முகம், அவரது மகன் மோகன்ராஜ் மற்றும் ஊர்மக்களையும் சந்தித்தோம்.
திரு. சண்முகம் கண்பார்வையற்றவர் என்பதால், பல்லடம் பேருந்து நிலையத்தில் பேனா, பென்சில் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். மனைவி சசிகலா உடல்நிலை சரியில்லாதவர் என்பதால், வீட்டிலிருந்து கொண்டு அவ்வப்போது விவசாய வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். இவர்களுக்கு மோகன்ராஜ் என்ற ஒரு மகன் இருக்கிறார். குடியிருப்புக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.
நடந்த நிகழ்வு குறித்து விசாரித்தோம். அங்கிருக்கும் வயதான பெரியவர்கள், எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து, அந்த எடத்துலதான் செத்தவங்கள பொதைக்கிறோம். திடீர்னு அங்க பொதைக்கக்கூடாதுன்னு சொன்னா நாங்க என்ன செய்யிறது என கையறுநிலையில் நின்று பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கினர்.
குழந்தையாகப் பிறக்கும்போதும் சரி, வயது முதிர்ந்து இயற்கை எய்தும் போதும் சரி, தலித்துகளுக்கு என்று எந்த மரியாதையும் இல்லை என்பது மட்டுமல்ல, அவச் சொற்களும், அவமானங்களுமே அவர்களுக்கு நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்கிறவர்களால் கிடைக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இருக்கும் இடத்திற்கு, குடிக்கும் நீருக்கு, படிப்புக்கு, சுயமரியாதைக்கு என வாழும் காலம் முழுவதும் மனிதர்களாகக் கருதப்படாத மக்களின், வாழ்வு முடிந்து புதைக்கும் இடத்திற்கும் போராட வேண்டிய துயரம் சொல்லில் வடிக்க முடியாத சோகம்.
ஆய்வின் முடிவில் நமது கோரிக்கைகள்
1. முத்தாண்டிபாளையம் அருந்ததிய மக்களுக்கு., பல்லடம் வட்டாட்சியர் உடனடியாக இடுகாட்டுக்கான நிலம் ஒதுக்கீடு செய்து உறுதிப்படுத்திட வேண்டும்.
2. அய்யம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், திரு. சண்முகம் அவர்களிடம், இறந்த சசிகலாவின் ஈமச்சடங்கு நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
3. தாயின்றி, தந்தைக்கும் வருவாயில்லாத நிலையில் தவிக்கும், 7 ஆம் வகுப்பு பயிலும் அவர்களின் மகன் மோகன்ராஜின் முழு கல்விச் செலவையும் மாவட்ட நிர்வாகம் ஏற்க வேண்டும்.
மேற்கண்ட ஆய்வில் மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டத் துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி, துணைச் செயலாளர் சி.கே.கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் வட்டச் செயலாளர் ஆர்.பரமசிவம், பல்லடம் வட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி விஜயன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் பங்களிப்புச் செய்தனர்.
#Tnuef_Tirupur
#ததீஒமுதிருப்பூர்